Rupeedesk Consultancy

உங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?

உங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?
How many mutual fund schemes should you have investment


முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள்? - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..  
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
Share Market Training

முதலீடுகளைச் செய்யும் போது பல முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் சில நேரங்களில் முதலீடு செய்கின்றனர். திடீர் என்று ஏதேனும் சிக்கல் என்றால் பல திட்டங்களில் முதலீடு செய்வது பல சிக்கலை ஏற்படுத்தும். சில ஃபண்டுகளை விற்கலாமா? எத்தனை திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
இதுபோன்ற முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தும் சில முக்கியக் கேள்வி பதில்களை இங்கே காணலாம்?


இரண்டு நல்லது, 6 அதிகம்
சராசரியாக முதலீட்டாளர்களுக்கு ஒன்று அல்லது மூன்று மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் தான் அவரது இலக்கை அடைவதற்கானதாக இருக்கும். வரிச் சேமிப்புத் திட்டம், மல்டிகேப் திட்டம், டெபெட் திட்டம் என முதலீடு செய்வது தான் சரியான முடிவு ஆகும். இதுவே அதிக முதலீடு வைத்துள்ளவர்கள் அதிகபட்சம் 6 திட்டங்கள் வரை முதலீடு

பல திட்டங்களில் முதலீடு செய்வது வாழ்க்கையைக் கடினமாக்கும்
பல மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது என்பது டிராக் செய்யவும் கடினமாக இருக்கும். உங்களுக்கு முதலீடுகளைக் கவனிக்க அதிக நேரம் இருக்கின்றது என்றால் சரி இல்லை என்றால் 4 முதல் 6 முதலீடுகளுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சரியான முடிவுகளை எடுக்கவும் பல திட்டங்களில் முதலீடு செய்யும் போது சிரமமாக இருக்கும்.

பல திட்டங்கள் = அதிகப் பன்முகத்தன்மை
ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்கள் என்பதே பன்முகத்தன்மை ஆகும். பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்துள்ளபோது நீங்கள் ஒரு திட்டத்தினைக் கூட முழுமையாக நம்பவில்லை என்று அர்த்தமாகவும். பல வகையாகப் பிரித்து முதலீடு செய்வது என்பது உங்கள் லாபத்தினையும் பாதிக்கும்

அதிகப் பன்முகத்தன்மை = டூப்ளிகேஷன்
பன்முகத்தன்மையான போர்ட்போலியோ என்பது சரியான முதலீட்டு முறை அல்ல. உதாரணத்திற்கு 6 டசன் திட்டங்களை வங்கினால் சில திட்டங்களின் போர்ட்போலியோ ஒன்றாகவே இருக்க வாய்ப்பு உண்டு. இது தேவை இல்லாத டூப்ளிகேஷன் மற்றும் வருவாயில் சமரசத்தினை ஏற்படுத்தும்.